சாய் பாபா சுப்ரபாதம் - SAI BABA SUPRABHATHAM || SHIRDI SAI BABA SONG || DEEPIKA || VIJAY MUSICALS

Details
Title | சாய் பாபா சுப்ரபாதம் - SAI BABA SUPRABHATHAM || SHIRDI SAI BABA SONG || DEEPIKA || VIJAY MUSICALS |
Author | Vijay Musical |
Duration | 26:01 |
File Format | MP3 / MP4 |
Original URL | https://youtube.com/watch?v=lxXtOATbt1Y |
Description
'' Shirdi ke Data Sabse Mahan ''
SAI BABA SUPRABHATHAM || SHIRDI SAI BABA SONG || ALBUM : MAHAN SAI || SINGER : DEEPIKA || MUSIC : PRADEEP || LYRICS : SENKATHIRVANAN || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
சீரடி சாய் பாபா சுப்ரபாதம் ।। ஆல்பம் : மகான் சாய் ।। பாடியவர் : தீபிகா ।। இசை : பிரதீப் ।। பாடல் : செங்கதிர்வாணன் ।। வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் ।। தமிழ் பக்தி பாடல் ।। விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
புவனமெலாம் செழித்திடவே அவதரித்த திருவுருவே
தவமிருந்து பெற்றதுவோ தாரணிதான் உந்தனையே
கதிரவனின் கிரணங்கள் கீழ்த்திசையில் உதித்தனவே
காத்திடவே விழித்தெழுவாய் சீரடிவாழ் சாய் நாதனே
விழித்தெழுவாய் வெள்ளையுடை ஞானியனே விழித்தெழுவாய்
விழித்தெழுவாய் பேதமிலா மாமுனியே விழித்தெழுவாய்
விழித்தெழுவாய் விதிமாற்றும் வித்தகனே விழித்தெழுவாய்
விழித்தெழுவாய் சாய்நாதா விரைவுடனே விழித்தெழுவாய்
கனிவுடைய பார்வையினை கண்டிடவே வந்து நின்றோம்
கவலையெல்லாம் மறந்திடவே உன்னருளை வேண்டுகின்றோம்
மணி ஒலிக்கும் நேரமிது மங்களத்தின் பொருள் உணர்ந்து
மனமிறங்கி விழித்தெழுவாய் சீரடிவாழ் சாய் நாதனே
விண்ணோக்கி விரல் கட்டி விளக்கங்கள் தருபவனே
விளையாடும் காலத்தின் விளையாட்டை முடிப்பவனே
கண்ணோக்கி எமைப்பார்த்து கருணை மழை பொழிந்திடவே
கைத்தொழுதோம் விழித்தெழுவாய் சீரடிவாள் சாய் நாதனே
முன்னோரின் சீதனமாய் முன்வந்த முழுமதியே
முடியாத அற்புதங்கள் நிகழ்த்திடவே வந்தவனே
கண்ணேறு படும்முன்பு கலைத்திடவாய் உறக்கத்தை
அன்புடனே விழித்தெழுவாய் சீரடிவாழ் சாய் நாதனே
சொன்னாலே இனிக்கின்றத் திருநாமம் உடையவனே
சுவையான அமுதாக எந்நாளும் இனிப்பவனே
மண்ணாள வந்தவனே மாசற்ற மாமணியே
மகிழுவுடனே விழித்தெழுவாய் சீரடிவாழ் சாய் நாதனே
புல்லினங்கள் அத்தனையும் கண்விழித்து அசைகிறதே
பூங்காற்று மெல்லெனவே புல்வெளியில் நடக்கிறதே
வல்லவனே வானுலம் வையகத்தை காப்பவனே
வணங்குகிறோம் விழித்தெழுவாய் சீரடிவாழ் சாய் நாதனே